Onmax DT மோசடியின் பின்னணியில் பிரபல அரசியல்வாதி – ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்ட ரகசியம்

0
473

Onmax DT பிரமிட் திட்ட விசாரணையை மூடி மறைக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கண்டி புறநகர் பகுதியைச் சேர்ந்த ஈ.ஜி. பெரேரா என்பவர் இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், மத்திய வங்கியின் ஆளுநர், சட்டமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பரிசோதகர் ஆகியோருக்கும் இது தொடர்பான கடிதத்தின் பிரதிகளை வழங்குமாறு ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளது.

இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த பிரியந்த என்ற நபரால் கண்டி கசுனின் பிரதிநிதியினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் மத்திய வங்கிக்கும் குறித்த பணம் வழங்கப்பட்டதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் வழங்கிதாக தகவல்

அத்துடன், Onmax DT தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சாரங்க ரந்திக ஜயதிஸ்ஸ மற்றும் இரண்டு பணிப்பாளர்களின் சார்பில் அமைச்சர் ஒருவரின் மகனுக்கு 6 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Onmax DT தனியார் நிறுவனத்தின் பணிப்பாளரான சாரங்க ரந்திக ஜயதிஸ்ஸவிடம் இருந்து பிரியந்த பற்றிய தகவல்களைப் பெற முடிந்துள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பெரேரா தனது கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

Onmax DT மோசடியின் பின்னணியில் பிரபல அரசியல்வாதி - ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்ட ரகசியம் | Onmaxdt Scam Central Bank Of Sri Lanka

இதனிடையே, சுமார் 3200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் Onmax DT என்ற தனியார் நிறுவன இயக்குநர்கள் கைது செய்யப்படாமை குறித்து பாரிய சர்ச்சை நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

Onmax DTபிரமிட் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

3000 கோடி ரூபாய்


பிரமிட் திட்டத்தின் மூலம் ஏற்கனவே 300 கோடி கணக்குகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 3000 கோடி ரூபாய் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதனை மிகவும் மந்தமான நிலையில் இரகசிய பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும், Onmax DT தடை செய்யப்பட்ட பின்னரும் மக்களிடம் இருந்து 292 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.