அஸ்வெசும நிவாரணத் திட்டத்துக்கான மென்பொருளில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே ஏராளம் பயனாளிகள் விடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற (27.06.2023 )ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இதனை இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்தாவது,
அதிகாரிகள் தரப்பில் குறைபாடுகள் இருந்தாலும் இவ்வளவு பாரியளவில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்துள்ளார்.
மானியத் திட்ட பயனாளிகள் தெரிவு

இந்நிலையில் குறைந்த வருமானம் வழங்கும் மானியத் திட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஸ்வெசும எனும் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளார். இதற்கான பயனாளிகளை தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
எனவே அஸ்வெசும திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட மென்பொருளில் ஏற்பட்ட பிழையே அதற்கான காரணம் எனவும் அதிகாரிகள் தரப்பில் குறைபாடுகள் இருந்தாலும் இவ்வளவு பாரியளவில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அதனை மேன்முறையீடு செய்வதன் மூலம் மட்டுமே தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என உதய கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஸ்வெசும மானியத் திட்டத்தில் விடுபட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.