ரத்தம் வழியும் முகத்துடன் மிரட்டும் பிரியங்கா சோப்ரா: வைரலாகும் ‘தி பிளப்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்

0
100

நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது நடிக்கும் ‘தி பிளப்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவரது முகத்தில் போலியான ரத்தம் வழிவது போல இருந்தது. இது அவரது கடினமான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்படும் அனுபவத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். மேலும் அவர் ஜான் சீனா நடிக்கும் ‘ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.