கைதிகள் தினம்: 350 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

0
123

கைதிகள் தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்பின் கீழ் 350 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இதன்படி சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட உரிய நிபந்தனைகளுக்கு அமைய தகுதி பெற்ற 350 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இதனிடையில், கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திறந்த வெளியில் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.