விவசாயத்திற்கே முன்னுரிமை – ரணில் வழங்கிய வாக்குறுதி

0
187

எல்லா சந்தர்ப்பங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மஹா கனதராவ குளத்தை நீராதாரமாக கொண்ட அனுராதபுரம் நீர் வேலைத் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிற்கு தீர்வளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இதன்போது விவசாயிகள் அதிபரிடம் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக கூறியிருந்தனர். அதற்கு அதிபரும் சாதகமாக பதிலளித்திருந்தார்.

மக்களின் யோசனை

நீர்த்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதால் எதிர்ப்புக்களை கைவிடுமாறும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிந்துக்குமாறும் விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.

அது தொடர்பிலான மக்களின் யோசனைகளை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத்தருமாறும் அவற்றில் சாதகமான விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

விவசாயத்திற்கே முன்னுரிமை..! ரணில் வழங்கிய வாக்குறுதி | Prioritize Agriculture In All Cases President Says

தவிரவும், மஹாகனதராவ குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு இவ்வருடத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஒரு பில்லியன் ரூபாவை உடனடியாக பயன்படுத்துமாறும் அதிபர் வலியுறுத்தினார்.

இடைநடுவில் கைவிட முடியாது

இந்த வேலைத் திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்த திட்டத்தை இடைநடுவில் கைவிட முடியாது எனவும் அவர் கூறினார்.

இதுவரையில் எல்லா அரசாங்கத்திலும் நீர் வழங்கல் சபை ஒரு அமைச்சின் கீழும் நீர்ப்பாசன திணைக்களம் ஒரு அமைச்சின் கீழும் காணப்பட்டது. ஆனால் இம்முறை அவை இரண்டையும் ஒன்றிணைத்து ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் இந்த வேலைத் திட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மஹா கனதார குளத்தை அண்மித்து வசிக்கு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புவதாக மஹாகனதார ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் சுபசிங்க ரத்நாயக்க இதன் போது நம்பிக்கையாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.