புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு முன்னுரிமை! பிரதமர் தெரிவிப்பு

0
407

இலங்கையில் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் போது அதை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெண்ணொருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை சமீபத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகள் குறித்து நடைமுறை புரிதல் இல்லாத ஆண்களுக்கு இந்த அமைச்சை ஒதுக்குவது அர்த்தமற்ற செயல் என சுட்டிக்காட்டிய பிரதமர் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.