மின்சாரத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் நன்றி

0
536

இலங்கையில் 70 சதவீதம் என்ற அளவில் புதுப்பிக்கப்பட்ட மின்சார உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்று அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மின்சக்தி திருத்தச்சட்ட மூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மின்சக்தி திருத்தச்சட்ட மூலம் நேற்று (09-06-2022) மாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டமூலம் நிறைவேறியுள்ளமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமை,

இலங்கை மின்சாரம் (திருத்தம்) சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நான் வரவேற்கிறேன்.

இது செலவு குறைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கட்டத்திற்கு விரைவாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. நன்றி என பதிவிட்டுள்ளார்.