இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (15) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இன்றைய தினம் காலையில் சென்ற பிரதமர் பாடசாலை அதிபருடன் கலந்துரையாடினார்.
இதன்போது பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் மாணவர்களுடனும் கலந்துரையாடி இருந்தார். யாழ்ப்பாண இந்துக்கல்லூரியை தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அதேவேளை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று மாலை சுழிபுரம், ஏழாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
மேலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளைய தினம் (16) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

