நித்தியானந்தா வருகை பொய்த்தகவல் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு

0
410

இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல சர்சைக்குரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நித்தியானந்தா வருகை;  ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல் | Arrival Of Nithyananda Srilanka

தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறும் அவர் கோரியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே சாமியார் நித்தியானந்தா இலங்கை வருவதாக தெரிவிக்கப்படும் செய்தியை ஜனாதிபதி ஊடகப்பிரிவு நிராகரித்துள்ளது.