”யார் நீதிமன்றம் சென்றாலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்”: திருகோணமலையில் ரணில் திட்டவட்டம்

0
113

எந்தவொரு நபர் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை இன்று (07) பிற்பகல் திருகோணமலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த ஜனாதிபதி; ”மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவது என கலந்துரையாடி தீர்மானித்துள்ளோம்.

யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அடுத்ததாக பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.