என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு போர் அல்ல அத்தோடு நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (07) ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா? அல்லது பொய்யைக் கூறி நாட்டைக் குழப்பத் தயாரா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நீங்கள் விரும்பினால் எனக்கு வாக்களியுங்கள் இதை முன்னெடுத்துச் செல்வேன் அத்தோடு நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை அதனை செய்து காட்டியுள்ளேன்.
ஏனையோர் வாக்குறுதிகளை வழங்குகின்றனர் அத்தோடு மற்ற வேட்பாளர்கள் எனக்கு சவாலாக இல்லை நாட்டின் எதிர்காலத்திற்காக வருகிறேன் ஆனால் ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக வரவுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.