சில நாட்களில் ஜனாதிபதி தேர்தல்: முக்கிய அரசியல்வாதிகளின் தற்போதைய நிலைப்பாடு

0
103

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை உள்வாங்க சஜித் தரப்பு பேச்சு நடத்திய நிலையில் அந்த பேச்சு வெற்றியளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இன்றையதினம் ஜனாதிபதி வேட்பாளாரான ரணிலின் பிரசார மேடையில் தலதா அதுகோரளே ஏறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பசில் ராஜபக்சவுடன் இரகசியப் பேச்சு வர்த்தை நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேர்தலில் ஆதரவை தராவிட்டால் பார் லைசன்கள் வாங்கிய விபரங்களை பகிரங்கப்படுத்தப்போவதாக ரணில் தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு தகவல் அனுப்பியுள்ளாராம். இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை வகிக்க சந்திரிகா பண்டாரநாயக தீர்மானித்துள்ளார்.