எதிர்ப்புகளை மீறி களனி பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி விஜயம்: புதிய கட்டிடம் திறப்பு

0
268

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக அண்மைக்காலமாக எதிர்ப்புகள் எழும்பியுள்ள போதிலும், ஜனாதிபதி இன்று (31) களனி பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று முற்பகல் பல்கலைக்கழகத்தில் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் திணைக்கள வளாகத்தில் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்தது.

ஜனாதிபதியின் பல்கலைக்கழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து களனி பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு கண்டி வீதியை மறித்து நேற்றுமுன்தினம் (29) இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Oruvan