ஜனாதிபதி பதவி விலக கூடாது அத்துரலியே ரத்தன தேரர் பல்டி

0
540

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாமல் நீடிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான அழைப்பு தமக்கு கிடைத்திருக்கிறது.

அந்த அழைப்பினை ஏற்று நிச்சயமாக வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கலந்து கொள்வோம்.

ஜனாதிபதி அந்தப் பதவியில் இருந்துகொண்டு, புதிதாக அமைக்கப்படும் அரசாங்கத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும்.

பிரதமர் பதவி விலகி புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வழி வகுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.