நாடாளுமன்ற அமர்வு நாட்களில் அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறுகின்றது.
இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் எதிரணிகளால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே அமைச்சர்களுக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.