சிவஞானம் சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

0
244

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் கூறியுள்ளார்.

இதேவேளை அமைச்சர்கள், பெரும்பான்மைக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறீதரனுக்குத் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவான விடயத்தை தென்னிலங்கையின் பத்திரிகைகளும், இணைய ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தன.