நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இனி வாகனங்கள் இல்லை: ஜனாதிபதி உறுதி

0
27

இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். ஏனெனில் இந்த நோக்கத்திற்காக பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் தற்போது முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படாது என்றும் அரசுக்குச் சொந்தமான அனைத்து சொகுசு வாகனங்களும் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏலத்திற்கு விடப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.