ஒரே பாலின மற்றும் கலப்பு திருமண ஆவணத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி பைடன்!

0
376

சமபாலினத்தவா் மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்காக அமெரிக்க நாடுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றிய சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளாா்.

சமபாலின மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் நிறைவேற்றின.

முக்கிய ஆவணத்தில் கையொப்பமிட்டார் அதிபர் பைடன்! | Same Sex Marriage Signed By President Biden

இந்த நிலையில், அந்த சட்டத்தில் ஜனாதிபதி பைடன் தற்போது கையொப்பமிட்டு அதனை சட்டமாக்கியுள்ளாா். இதனையடுத்து அமெரிக்கவில் சம பாலினத்தவா் மற்றும் இனக் கலப்பு திருமணங்கள் சட்டபூர்வமாகியுள்ளது.

உச்ச நீதிமன்றம் அங்கீகாரம்

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவில் சம பாலினத்தவா்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உச்ச நீதிமன்றம் சட்ட அங்கீகாரம் அளித்ததை தொடா்ந்து, நூற்றுக்கணக்கான சம-பாலின திருமணங்கள் நடந்துள்ளன.

இந்த நிலையில், கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த சட்ட அங்கீகாரத்தை அந்த உச்ச நீதிமன்றமே அண்மையில் ரத்து செய்திருந்தமை , மனித உரிமை ஆா்வலா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

முக்கிய ஆவணத்தில் கையொப்பமிட்டார் அதிபர் பைடன்! | Same Sex Marriage Signed By President Biden

அதேசமயம் தற்போது பழமைவாத நீதிபதிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளதாக கருதப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில், கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரத்தைப் போலவே, சம பாலினத்தவா் திருமணங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாது வெள்ளை இனத்தவா்கள், கருப்பினத்தவா்கள் போன்ற மாற்று இனத்தினருக்கு இடையே நடைபெறும் திருமணங்களுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.