நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளானதாகத் தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
ஆழ்ந்த இரங்கல்
நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதற்கு அரசாங்கம் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும் சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இவ்வாறான விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதற்காக “கிளீன் ஶ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த இந்த கொடூரமான வீதி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சகல தொடர்புடைய மருத்துவமனைகளையும் தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து எதிர்கால நடவடிக்கைகளையும் எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதாரத் துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.