ஜனாதிபதி அநுரகுமார திருகோணமலைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது கிழக்கு ஆளுனர் ஜனாதிபதியை விருந்துபசாரத்திற்காக ஆளுனர் மாளிகைக்கு அழைத்திருந்தார்.
அப்போது நான் ஜனாதிபதியாக இங்கு வரவில்லை தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருக்கிறேன். அதற்குரிய வேலைகளையும் செலவுகளையும் கட்சி பார்த்துக்கொள்ளும் நீங்கள் இதுபோன்ற விடயங்களில் அவதானமாக இருங்கள் என்று ஜனாதிபதி ஆளுனருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
அதேவேளை பிரதமர் ஹரிணி அவர்கள் தனது உடல் பரிசோதனைக்காக சாதாரண ஒழுங்கு முறைப்படி தன்னந்தனியாக ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு சென்று வந்திருக்கிறார்.
வைத்தியசாலை ஊழியர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் ஏன் இப்படி தனியாக வந்தீர்கள் என்று கேட்டதற்கு எனக்கு சுகமில்லையென்றால் நான் தானே வர வேண்டும் என்று கூறி உள்ளார்.
