”ஜனாதிபதியால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது”: ஹரிணி

0
84

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறமையானவராக இருந்தாலும் தனியொருவரால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற பேரணியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”நாட்டில் கடந்த 75 வருடங்களாக ஆட்சியிலிருந்த எவரும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் என நினைத்திருக்க மாட்டார்கள். அனால் மக்கள் அந்த அதிகாரத்தை எமக்கு அளித்தார்கள்.

நாட்டை மீட்பதற்கு வலுவான அமைச்சரவை மற்றும் முற்போக்கான நாடாளுமன்றம் அவசியம். ஜனாதிபதியால் மாத்திரம் இந்த நாட்டை கட்டியெழுப்புவது கடினம் எனவே நாடாளுமன்றத்திற்கு சிறந்த அணியை அனுப்புவது மக்களின் பொறுப்பு.

எனவே நாட்டின் தரத்தை மாற்றியமைக்கும் குழுவொன்றை நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.