90-களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து டாப் இடத்தில் இருந்து வந்தார்.
திருமணம் குழந்தை
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சினேகா 2009ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்துள்ளார். அதன்பின் குடும்பத்தினர் சம்மதத்துடன் 2012ல் திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர். சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்து சினேகா மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். பிரசன்னாவும் வில்லன் ரோலிலும் இரண்டாம் கதாநாயகன் ரோலிலும் நடித்து வருகிறார். இப்படி 10 ஆண்டுகள் தங்களின் திருமண வாழ்க்கையை தொடர்ந்து வரும் பிரசன்னா, சில மாதங்களுக்கு முன் தங்களது 10 வது திருமணம் நாளை கொண்டாடி எமோஷ்னலாக ஒரு பதிவினை போட்டிருந்தார்.
சினேகா – பிரசன்னா விவாகரத்து
இந்நிலையில் 10 வருட திருமண வாழ்க்கையை விவாகரத்து மூலம் பிரிந்து விட்டதாக சினேகா – பிரசன்னா முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் பரவியது. தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த செய்தி வைரலாக இதற்கு பதிலடி கொடுக்கும் படி சினேகா கணவர் பிரசன்னாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார். இதையும் நம்பாத சில ஊடகம் விவாகரத்து செய்தியை கொளுத்தி போட்டு வந்தது.
தற்போது சினேகாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, “முழுமுற்றும் புரளியே! இறையருளால் மகிழ்வான இல்வாழ்வும் முத்தான மக்களும் பெற்று இணைந்திருக்கிறோம். இணைந்தேயிருப்போம்…” என்று ஒரு பதிவினை போட்டு பதிலடி கொடுத்துள்ளார். சினேகா தன் பங்கிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரசன்னா படப்பிடிப்பில் கலந்து கொண்டும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.