பிரபு மகள் திருமணத்தில் ரூ.500 கோடி வரதட்சணை தரவில்லை: வெளியான தகவலுக்கு மறுப்பு

0
213

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

ஆதிக்கை விட ஐஸ்வர்யா மூன்று வயது மூத்தவர். பிரபு தனது மகள் திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு 500 கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்ததாக சில செய்திகள் வந்தன. இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பேசும் போது, “பிரபு குடும்பத்துக்கு 500 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது.

பிரபுவின் அப்பா சிவாஜி காலத்தில் இருந்தே அவர்களின் குடும்பம் பெரும் பணக்காரர்கள். ஆனால் குடும்பத்தில் சில சொத்து தகராறு உள்ளது. அவ்வளவு பெரிய பணம் எல்லாம் கொடுக்கவில்லை” என கூறினார்.

Oruvan