விசுவாசிகளுக்கு பலம்வாய்ந்த அமைச்சுப் பதவிகள்; ஜனாதிபதியின் அதிரடி திட்டம்!

0
224

அமைச்சரவை மாற்றத்தில் அதிபருக்கு விசுவாசமான உறுப்பினர்களுக்கு பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி சிறி லங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கான பெயர் பட்டியலை அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், அவர்களில் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு அதிபர் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீண்ட நாட்களாக அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருந்த பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர், அமைச்சுப் பதவி கிடைக்காவிடின், அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்ற ஆதரவு தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடும் என கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.