மகனுக்காக ஒன்லைன் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் பூரான்; அதிர்ச்சியடைந்த தாய்

0
97

தன்னுடைய மகனுக்காக ஓர்டர் செய்த ஐஸ்கிரீமில் பூரான் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தாய் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

உத்திரபிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த தீபா தேவி என்பவர் ஓர்டர் செய்த ஐஸ்கிரீமிலேயே பூரான் இருந்துள்ளது. இவர் தன்னுடைய 5 வயது மகனுக்காக வெண்ணிலா மேஜிக் ஐஸ்கிரீமை ஓர்டர் செய்துள்ளார்

திறந்து பார்த்ததும் அதில் பூரான் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார், உடனடியாக புகார் அளிக்கவும் ஐஸ்கிரீமுக்கான தொகையை திரும்ப அளித்தனர். இது தொடர்பாக அமுல் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் கூறினர்.

இதேபோன்று கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.