பிரபல யூடியூபர் TTF வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

0
215

அடுத்த 10 ஆண்டுகளுக்கு டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. அடிக்கடி எதாவது சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கும் டிடிஎப் வாசன் காஞ்சீபுரம் அருகே பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.

வீலிங் செய்ய முயன்று விபத்தில் சிக்கிய அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், அதிவேகமாக பைக்கை இயக்கி விபத்தை ஏற்படுத்திய டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.