தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் இன்று காலை காலமானார்.

0
418

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது

தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார்

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் வீட்டிற்கு முன் தொண்டர்களும் இரசிகர்களும் கதறி அழுது தன்னுடைய கவலையை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயகாந்த் மரணத்தால் ரசிகர்கள், திரையுலகம் மற்றும் தேமுதிக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர்.