தங்கதுரையின் BMW காரில் பயணித்த ஏழை குழந்தைகள்: வைரலாகும் வீடியோ

0
133

பொதுவாக பிரபலங்கள் புதிதாக கார் வாங்கினால் அதில் தங்களது குடும்பத்தினருடன் ரைடு சென்று அதை வீடியோவாக வெளியிடுவார்கள்.

ஆனால் தங்கதுரை, தன்னுடைய BMW காரில் ஏழை குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களுடன் சென்னையை ஒரு ரவுண்டு அடித்துள்ளார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதை தங்கதுரையின் இந்த செயல் வெளிப்படுத்தி உள்ளது.

தங்கதுரையின் BMW காரில் பயணித்த அந்த குழந்தைகளுக்கு அவர் ருசியான உணவு வாங்கி கொடுத்தது மட்டுமின்றி ஷாப்பிங்கும் அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்துள்ள தங்கதுரை அவர்கள் படிக்க தேவையான கல்வி உபகரணங்களையும் அன்பளிப்பாக அளித்து இருக்கிறார்.

அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வாங்கிய இந்த காரின் விலை ரூ.45 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.