நான்கு விருதுகளை தட்டித் தூக்கிய பொன்னியின் செல்வன்: National Film Awards 2022

0
135

ஒவ்வொரு வருடமும் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது 70ஆவது தேசிய திரைப்பட விருது விழா அறிவிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற்ற படங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதில் தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் 4 விருதுகளை தன்வசப்படுத்தியுள்ளது.

அந்த வகையில்,

01.சிறந்த திரைப்படம் – பொன்னியின் செல்வன் பாகம் 1

02.சிறந்த இசைமையப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான்

03.சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவிவர்மன்

04.சிறந்த ஒலி வடிவமைப்பாளர் – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி

மேலும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைக்கா குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையிலான லைக்கா புரடக்ஸன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்வை பெற்றதுடன் வசூலிலும் வேட்டையாடியிருந்தமை என்பதும் குறிப்பிடத்தக்கது.