அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொடிகளை அகற்றியெறிந்த பொலிஸார் – ஒருவர் கைது

0
192

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீதி ஓரத்திலே கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை பொலிஸார் அகற்றிய நிலையில், மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துயிலும் இல்ல காணியானது யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை இராணுவத்தின் 24வது எஸ்.எல்.என்.ஜி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த துயிலும் இல்லத்தில் மக்கள் நின்மதியாக அஞ்சலி செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் துயிலுமில்ல காணியிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு மக்கள் கோரி வருவதுடன், இராணுவத்தினர் வெளியேறாத நிலையில் மக்கள் வீதி ஓரத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த காணியானது தனியார் காணியாக காணப்படுவதுடன், இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத ஒரு பகுதி காணியை தனிநபர் ஒருவர் காணி உரிமையாளரிடருந்து பெற்று வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகிறார்.

இதற்கும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருவதோடு துயிலுமில்ல காணியில் இருந்து இராணுவம் மற்றும் வர்த்தக நிலையம் அமைத்த தனிநபர் ஆகியோரை வெளியேறி காணியை துயிலுமில்லத்துக்கு வழங்குமாறு கோரி போராடிவருகின்றனர்

இம்முறை தேசிய மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்தபோது இந்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக கொடிகளை கட்டி விளக்குகள் வைக்க வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுடன் வர்த்தக நிலைய உரிமையாளர் முரண்பட்ட நிலையில் பணிக்குழுவினருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

Maaveerar Naal 2023 - Alampil

Maaveerar Naal 2023 – Alampil

இந்நிலையில், தருணம் பார்த்திருந்த பொலிஸார் அங்கு வருகை தந்து இரண்டு தரப்பினை சேர்ந்தவர்களிலும் சிலரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றதுடன், குறித்த இடத்தில் இருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளையும் அகற்றினர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு தருணம் பார்த்திருந்த பொலிஸார் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த அலங்காரத்தை சிதைத்து மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டவர்களில் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவை சேர்ந்த ஒருவர் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Maaveerar Naal 2023 - Alampil

Maaveerar Naal 2023 – Alampil

Maaveerar Naal 2023 - Alampil

Maaveerar Naal 2023 – Alampil

Maaveerar Naal 2023 - Alampil

Maaveerar Naal 2023 – Alampil

Maaveerar Naal 2023 - Alampil

Maaveerar Naal 2023 – Alampil

Maaveerar Naal 2023 - Alampil

Maaveerar Naal 2023 – Alampil

Maaveerar Naal 2023 - Alampil

Maaveerar Naal 2023 – Alampil