ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தேடி அலையும் பொலிஸார்!

0
86

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைத் தேடிகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹில்டன் ஹோட்டலின் தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் தொடர்பில் வாக்குமூலங்களைப் பெற ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸாரினால் தேடப்படுவதாகத் தெரியவருகின்றது.

ஹில்டன் ஹோட்டலின் தரிப்பிடத்தில் பொலிசாரால் கைப்பற்றப்பட்ட சொகுசுகார் பாகங்களாக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு பொருத்தி வேறோர் வாகனத்தின் இலக்க தகட்டுடன் பாவிக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக தற்போது ஆஜராக முடியாது என தனது சட்டத்தரணிகள்மூலம் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவித்திருந்த நிலையில் எனினும் சில நாட்கள் ஆகியும் அவர் வாக்குமூலம் அளிக்காததால் விசாரணையும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்ந்தும் வாக்குமூலம் வழங்க வராத பட்சத்தில் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.