பொலிஸ் தடுப்பிலிருந்தவர்களுக்கு விஷம் கலந்த பால்..! 7 பேருக்கு விளக்கமறியல்

0
189

கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் வழங்கிய சம்பவத்தில் 7 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் தரங்கா மஹவத்த உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹா தெல்தோட்டை பிரதேச தோட்டத்திலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரை அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.