பாகிஸ்தான் இலக்கு வைத்த ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி

0
103

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்று விமானப்படையினருடன் கலந்துரையாடினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர் பிரதமர் மோடியின் விஜயம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளின் இடைப்பட்ட இரவில்
பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற விமானப்படை நிலையங்களில் ஆதம்பூரும் ஒன்றாகும்.