55 பேருடன் கடலில் வீழ்ந்த விமானம்!

0
20

சோமாலியாவில் 55 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10) ஏடன் அட்டே சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் ஆழமற்ற நீரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. செவ்வாய்க்கிழமை காலை மொகடிஷுவின் ஏடன் அப்துல்லே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 15 நிமிடங்களுக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள், விமானம் தண்ணீரில் மிதப்பதையும், அதிலிருந்து பயணிகள் அவசரமாக வெளியேறுவதையும் காட்டியது. இந்நிலையில் விமான விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சோமாலியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.