ஒரே நபரை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள் பிங்கி ,ரிங்கி!!

0
491

இந்தியாவில் இரட்டை சகோதரிகள் ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்த சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி.

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இருவருக்கும், ஒருவரையொருவர் பிரிந்து செல்ல மனமில்லை.

எனவே எப்போதும் சேர்ந்தே வாழ வேண்டும் என்பதற்காக ஒரே நபரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

இதன்படி தங்களுக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தெடுத்துவிட்டு, இருவீட்டார் சம்மதத்தையும் பெற்றுள்ளனர்.

இவர்களின் விருப்பத்துக்கு வீட்டில் ஓகே சொல்ல, கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

இது சட்டப்பூர்மாக அங்கீகரிக்கப்பட்டதா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வரும் நிலையில், பலர் நகைச்சுவையாக கமெண்டுகளை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.