மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகளை வன்புணர்வு செய்யும் காமுக ஆசிரியர் குறித்து நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி அம்பலப்படுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடந்த 07ம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவை புறக்கணித்து செயல்படும் பிள்ளையானின் கட்சி அமைப்பாளர்களில் ஒருவரான மட்டக்களப்பில் உள்ள முன்னணி தேசிய பாடசாலை ஒன்றின் ஆசிரியர் செய்யும் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்து வரும் குறித்த ஆசிரியர் பிள்ளையானின் அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டத்திற்கு அப்பால் சென்று பொலிஸாரை செயல்பட விடாமல் தடுக்கும் அளவுக்கு அவர் பலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஆசிரியர் பள்ளி மாணவியை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக அந்தக் மாணவி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரான ஆசிரியர் உடனடியாக கைது செய்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூலை 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் பொலிசாருக்கு செய்தி அனுப்பியது.
எனினும் இன்று வரை போலீசார் அவரை கைது செய்யவில்லை. சந்தேகநபர் வழக்கறிஞர் மூலம் சரணடைவார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அது காவல் துறையின் கடமையல்ல.
சந்தேக நபர் பிள்ளையான் கட்சியின் அமைப்பாளர் என்று பகிரங்கமாக கூறுகிறார். அதேவேளை குறித்த பாடசாலையில் கலை பிரிவில் இரண்டு மாணவிகள் உள்ளார்கள்.
ஒரு மாணவி வராத போது, நான் சொல்வது போல நீ நடந்துக்காவிட்டால் உனக்கு இன்னும் பிரச்சனை வரும் என வெருட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு தலையிட்டு சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதில் குறிப்பிட்ட ஆசிரியர் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் சித்திர பாடம் நடத்தும் ஆசிரியராக பணி புரிவதாகவும் அவரது அரசியல் பலத்தை பயன்படுத்தி மாணவிகளை தனது காமுக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குனர் ப்ரணீத்தா வர்ணகுலசூரிய (Pranitha Warnakulasuriya) தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் நேர் காணல் ஒன்றில் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
குறித்து மாணவி நேரடியாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பின்னரே துஸ்பிரயோக சம்பவம் அம்பலத்திற்கு வந்ததாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குனர் ப்ரணீத்தா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை தனமல்வில பாடசாலை மாணவி கூட்டு வன்புனர்வு தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 22 பேர் கைதாகியுள்ள நிலையில் இவ்விடயமும் பேசுபொருளாகியுள்ளது.