அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஜொலித்த கலைஞரின் புகைப்படம்!

0
106

மறைந்த தி.மு.க தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் நேற்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அமெரிக்காவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் நியூ யார்க் தமிழ் சங்கத் தலைவருமான கதிர்வேல் குமாரராஜா தனது குடும்பத்துடன் சேர்ந்து கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது காசை செலவு செய்து நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முழு அளவிலான விளம்பரப் பலகையில் கலைஞரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளார்.

அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதிர்வேல் ராஜாவின் குடும்பத்தினர் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. 

பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.