இலங்கையில் புதுமணத் தம்பதிகளுக்கு பரிசாக பெட்ரோல்!

0
914

இலங்கையில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் புது மணமக்களுக்கு பரிசாக பெற்றோலை நண்பர்கள் வழங்கிய சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் புது மணமக்களுக்கு இப்படி ஒரு பரிசா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களும் உச்ச விலையில் விற்கப்படுகிறது.

மேலும் எரிபொருள், எரிவாயு, மண்ணெண்ணெய் என அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நீடிக்கின்றது.

இந்த நிலையில், தங்கத்துக்கு நிகராக பெற்றோல் பரிசை மணமக்களுக்கு வழங்கியுள்ளமை பலரை சிரிக்க வைத்துள்ளதோடு சிந்திக்கவும் வைத்துள்ளது.