வசந்த முதலிகே விடுதலைக்கு எதிராக மனுத்தாக்கல்!

0
359

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.