வர்த்தக உயர் நீதிமன்றங்களில் பதிவுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான அனைத்து நோக்கங்களுக்கும் ஆங்கில மொழியைப் பயன்படுத்த அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை நீதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர்கள் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரசியலமைப்பின் 24(4) உறுப்புரையின் பிரகாரம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான வர்த்தகத் துறையில் ஆங்கில மொழியே பிரதானமாகப் பயன்படுத்தப்படுவதாகவும், அந்த உள்ளடக்கங்களை சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பதற்கு கணிசமான செலவும் நேரமும் தேவைப்படுவதாகவும் அமைச்சரவை குறிப்பிட்டுள்ளது.



