தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள ரணில் யாழ்ப்பாணத்துக்கு வரக்கூடாது என பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணாவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில் இன்று அமைதிவழி எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் பொதுவாக அனைவருக்கும் இப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த போதும், தமிழ் தேசியத்தில் பயணிக்கும் எந்த ஒரு கட்சிகளின் தலைமைகளும், கட்சிகளில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
மேலும் பொலிசார், இராணுவத்தின் அராஜகத்தின் மத்தியில் இறுதிவரை மாணவர்களும் பொது மக்களுமே போராடியிருந்தனர்.