நாட்டை சிறப்பாக வழிநடத்தக்கூடிய தலைவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும்: நீதி அமைச்சர்

0
217

நாட்டை சிறப்பாக வழிநடத்தக்கூடிய தலைவர்களையே மக்கள் எதிர்காலத்தில் தெரிவு செய்வது முக்கிய மானதாகும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (24.02.2024) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

கிராமங்கள் அபிவிருத்தி
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமூகத்தில் போதைப் பொருள் செயற்பாடுகளை தடுப்பதற்கும் இன நல்லிணக்கம் சகவாழ்வு ஊடாக கிராமங்கள் அபிவிருத்தி செயற்பாடுகளை திறமாக முன்னெடுப்பதற்கு சர்வமத நல்லிணக்க சகவாழ்வு மன்றங்களின் செயற்பாடு முக்கியமானதாகும்.

மதத் தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் இந்தக் குழுக்கள் கிராமங்களின் அபிவிருத்திக்காகவும் இன நல்லிணக்கத்திற்காகவும் போதைப் பொருள் பாவனை தடுக்கும் வகையிலும் எதிர்காலத்தில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பிரதேச செயலக பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட சர்வமத நல்லிணக்க சகவாழ்வு மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட மதத் தலைவர்கள் உறுப்பினர்களுக்கான நியமனங்களையும் வழங்கி வைத்துள்ளார். இதில் நீதிமற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜெயரத்தின, செயலாளர் எம். என்.ரணசிங்க இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் மதத் தலைவர்கள் உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.