பலஸ்தீனுக்கு பூரண சமாதானத்துடன் நிம்மதியும், சுதந்திர வாழ்வும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் வீ ஆர் வன் அமைப்பு ஏற்பாடு செய்த சமாதான எழுச்சி நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதன்போது பிரகடனம் ஒன்று வாசிக்கப்பட்டு அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரின் ஒப்புதலுடன் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தில் கையளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் குறித்த பிரகடனம் பற்றிய நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கிய பல சிவில் சமூக இயக்கங்கள், இலங்கைக்கான பலஸ்தீன அரசின் தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச். டார் செயிட்வர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.