விமானத்தில் ஊசி குத்தியதால் 18,000 டொலர் இழப்பீடு கேட்ட பயணி!

0
1

சீன விமானத்தில் ஊசி தம்மைக் குத்தியதால் அதில் பயணம் செய்த சீன பயணி ஒருவர் இழப்பீடாக 18,000 டொலர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா சௌதர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த அவர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது தம்முடைய கைத்தொலைபேசியை எடுக்க முயன்ற போது அவரது விரலில் ஊசி ஒன்று அவரைக் குத்தியது.

இந்நிலையில் அது இன்சுலின் (insulin) ஊசியாக இருக்கலாம் என்று அந்த நபர் சந்தேகிக்கின்றார். விமான ஊழியர்கள் அவருக்கு உதவிய போதிலும் அந்தச் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் அந்த ஊசியை விட்டுச்சென்றது பிறகு உறுதி செய்யப்பட்டது. விமானம் தரையிறங்கியவுடன் அவருடைய விமானச்சீட்டிற்கு 250 டொலரும் நடந்த சம்பவத்திற்குக் கூடுதலாக 138 டொலரும் விமான நிறுவனம் வழங்க முன்வந்தது.

எனினும் அது போதாது என்று கூறி குறித்த பயணை அந்தத் தொகையை வாங்க மறுத்து இழப்பீடாக 18,000 டொலர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.