இலங்கையுடனான கூட்டு பலப்படுத்தப்படும்: சீன வெளிவிவகார அமைச்சர் உறுதி

0
169

இலங்கையுடனான தனது பங்காளிப்பை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சர் கிங் கேங் (Qin Gang) தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் இன்றைய தினம் (26.05.2023) இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் எம்.யு.எம் அலி சப்ரியை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை சீனாவின் தியான்ஜினில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்கும் தூதுக்குழுவை சப்ரி வழி நடத்துகிறார்.

இலங்கையுடனான பங்காளிப்பு பலப்படுத்தப்படும்: சீன வெளிவிவகார அமைச்சர் உறுதி | Chinese Foreign Minister Assures Sri Lanka

உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும்

‘தொழில் முனைவோர்: உலகப் பொருளாதாரத்தின் உந்து சக்தி’ என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த மன்றம், உலகெங்கிலும் உள்ள 90 நாடுகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களிடையே உரையாடலுக்கான தளத்தை வழங்கும். இது பொருளாதார சவால்களில் பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் சப்ரி, ‘இழந்த பத்தாண்டுகளைத் தடுப்பது’ (Preventing a Lost Decade) என்ற வட்ட மேசை மாநாட்டிலும், ‘எதிர்கால பொருளாதாரத்தை எவ்வாறு வலுப்படுத்துவது’ என்ற தலைப்பிலான பங்குதாரர்களின் கலந்துரையாடலிலும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.