அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்துவது அவசியமற்றது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தலொன்று நடத்தப்படமாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.