உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவு குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
நேற்றைய தினம் கூடிய தெரிவு கூழு இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்ததாக கலாநிதி ஹர்ஸ டி சில்வா குறிப்பிட்டார்.
மேலும், மத்திய வங்கியின் ஆளுனர் உள்ளிட்ட மத்திய வங்கியின் நிதி அதிகாரிகள், நிதி அமைச்சின் செயலாளர், திரைசேரி அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் ஆகிய பலர் இந்த குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான மேலதிக கலந்துரையாடலுக்காகவே அரச பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மாலை மீண்டும் கூடவுள்ளது.
உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா தெரிவத்தார்.
இது தொடர்பான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டதன் பின்னரே உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
மேலும் உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் நாளைய தினமும் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் அரசாங்கம் கொண்டு வரப்படவுள்ள யோசனையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மாகித்துள்ளது.
நேற்று மாலை எதிர்க் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.