அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சிடார் கடற்கரையில் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய செஸ்னா 152 விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானம் கடற்கரையில் தரையிறங்கியது. ஆனால் விமானி மற்றும் பயணிகள் காயமடையவில்லை. கடற்கரையில் தரையிறங்கிய விமானம் பலத்த சேதமடைந்தது. என்ஜின் கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “சிடார் கடற்கரையில் ஒரு சிறிய ஒற்றை எஞ்சின் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் இயந்திரம் நடுவானில் செயலிழந்ததால், 60 வயது பைலட் கடற்கரையில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.” அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.