ஆஸ்கார் விருது வென்ற பிரபல நடிகர் மர்மமான முறையில் மரணம்!

0
321

ஆஸ்கார் விருது வென்ற பாரசைட் திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல தென் கொரிய நடிகரான லீ சுன்-கியூன் தனது 48 வயதில் மர்மமான முறையில் மரணமடைந்தார். 

மத்திய சியோலில் உள்ள ஒரு பூங்காவில் அவர் தனது காருக்குள் இன்று உயிரிழந்து கிடந்ததாக தென் கொரிய அவசரகால சேவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

நடிகர் லீ சுன்-கியூனின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லீ சுன்-கியூன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆஸ்கார் விருது வென்ற பிரபல நடிகர் மர்மமான முறையில் மரணம்! | Oscar Winning South Korean Actor Lee Sun Kyun Dies

மன வருத்தத்தில் இருந்த நடிகர் லீ சுன்-கியூன் தற்கொலை தொடர்பில் ஒரு தகவலை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது குடும்பத்தினர் கூறியதையடுத்து அவரை பொலிஸார் தேடி வருகிறார்கள் என முன்னதாக செய்திகள் வெளியாகின. 

இவ்வாறான சூழ்நிலையில் அவர் காருக்குள் சடலமாக கிடந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.