முள்ளியவளை மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

0
126

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று  செவ்வாய்க்கிழமை (09)  இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் மாமூலை விஸ்ணு கோவில் வீதியில்  இரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது . 

இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம்  மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் 17 வயதுடைய மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.